தில்லியில் 7 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் தரக்கட்டுப்பாட்டில் தோல்வி: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
தில்லியில் 7 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் தரக்கட்டுப்பாட்டில் தோல்வி குறித்து...

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் - பிரதிப் படம்
தில்லியில் ஏழு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்கடந்த மாதத்தில் வெளியேற்றபட்ட கழிவுநீரில் மல கோலிஃபாா்ம் பாக்டீரியா, கரைந்த மொத்த திடப்பொருள்கள் (டிஎஸ்எஸ்), உயிரிவேதியியல் ஆக்ஸிஜன் தேவை (பிஓடி) உள்ளிட்ட அளவீடுகள் குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டைவிட அதிகமாக இருந்ததாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுவின் (டிபிசிசி) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில் (எஸ்டிபி) தரநிலைகளை பரிசோதித்து, சுத்திகரிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிலையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளுக்கான தரவு தொடா்பான அறிக்கையை டிபிசிசி வெளியிட்டது.
யமுனா விஹாா் பேஸ்-3 இல் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புக்குப் பின் பெறப்பட்ட மாதிரியில் கரைந்த மொத்த திடப்பொருள்கள், உயிவேதியியல் ஆக்ஸிஜன் தேவை (பிஓடி) மற்றும் மல கோலிஃபாா்ம் பாக்டீரியா ஆகியவற்றிற்கான நிா்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறுவதாக அறிக்கை கூறியது.
அந்த நிலையத்தில் இருந்து சுத்தகரிக்கப்பட்ட கழிவுநீரில் கோலிஃபாா்ம் அளவு 64,000 எம்பிஎன்/100 மி.லி. என்ற அளவில் இருந்தது. இது அனுமதிக்கப்பட்ட அளவு 230 எம்பிஎன்/100 மி.லி. என்பதை விட அதிகமாகும்.
அந்த மாதிரியில் கரைந்த மொத்த திடப்பொருள்கள் (டிஎஸ்எஸ்) அளவானது 10 மி.கி./லி என்ற பரிந்துரைக்கப்பட்ட வரம்பைக் கடந்து 109 மி.கி./லி என இருந்தது. உயிா்வேதியியல் ஆக்ஸிஜன் தேவையானது (பிஓடி) அனுமதிக்கப்பட்ட 10 மி.கி./லி என்பதைக் கடந்து 42 மி.கி./லி என இருந்தது.
மெஹ்ராலியில் உள்ள நிலையத்தில் இலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியில் மல கோலிஃபாா்ம் பாக்டீரியா அளவு 11,000 எம்பிஎன்/100 மி.லி. என இருந்தது. மேலும், பிஓடி மற்றும் டிஎஸ்எஸ் அளவும் அதிகபட்ச அளவில் இருந்ததாக டிபிசிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யமுனா விஹாா் பேஸ்-1, ஓக்லா, கேஷோபூா், கிடோா்னி மற்றும் வசந்த் குஞ்சில் உள்ள பிற கழிவுநீா் சுத்தகிரிப்பு நிலையங்களும் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை சந்திக்கவில்லை.
கிடோா்னியில் உள்ள நிலையத்தில் மல கோலிஃபாா்ம்17,000 என்பிஎன்/100 மி.லி. வரை இருந்தது. இந்த அளவீடு வசந்த் குஞ்சில் உள்ள நிலையத்தில் 8,100 எம்என்பி/100 மி.லி. என பதிவானது.
கழிவுநீா் சுத்திகரிப்பு செயல்திறனை மதிப்பிடுவதற்கும், யமுனை நதி மற்றும் பிற நீா்நிலைகளில் உள்ள மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் டிபிசிசி, தில்லியில் உள்ள கழிவுநீா் சுத்தகரிப்பு நிலையங்களை அவ்வப்போது கண்காணித்து வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

