திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையின் மையப் பகுதியில் ஆலங்குளம் அமைந்துள்ளது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, வீ.கே.புதூர் போன்ற முக்கிய நகரங்களைச் சுற்றி 100-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம், அரிசி ஆலைகள் உள்ளிட்ட தொழில்கள் நடைபெறுகின்றன. இப் பகுதி சிறுவணிகர்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதி. இங்குள்ளோர் பலர் கேரளத்தின் பல பகுதிகளில் பாத்திரம், ஜவுளி வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல இப் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு அதிகளவில் காய்கனிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் முழுவதும் அரிசி விநியோகமும் நடைபெறுகிறது.