திருநெல்வேலி, ஜன. 8: இந்து மாணவர்க்கு கல்வி உதவித்தொகை கோரி பாஜக சார்பில் சென்னையில் இம் மாதம் 29-ல் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்ற வேண்டும் என, பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பாஜக கிழக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கட்டளை எஸ். ஜோதி தலைமை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் எஸ்.வி. அன்புராஜ், மாநில பொதுச் செயலர் எஸ்.ஆர். சரவணப்பெருமாள் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலர்கள் எஸ்.வி. குருசாமி, கலைச் செல்வன், மாவட்ட அமைப்புச் செயலர் வி.வி.ஐ. சுரேஷ், மாவட்டப் பொருளாளர் கார்த்திக் நாராயணன் பங்கேற்றனர்.
இந்து மாணவர்க்கு கல்வி உதவித்தொகை கோரி சென்னையில் இம் மாதம் 29-ல் பாஜக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் இம் மாவட்டத்தில் இருந்து திரளான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.
ராமையன்பட்டி முதல் மேலப்பாளையம் வரை இணைப்புச் சாலை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மகளிரணி கூட்டம்: பாளையங்கோட்டையில் மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேசிய மகளிரணி துணைத் தலைவர் பூர்ணிமா பிரகாஷ் தலைமை வகித்தார். கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் நடத்த வேண்டிய போராட்டங்கள் குறித்து அவர் விளக்கினார்.
தேசியச் செயலர் விக்டோரியா கௌரி, மாநில மகளிரணித் தலைவர் தமிழரசி, பொதுச் செயலர் உமாபாரதி ராஜன், துணைத் தலைவர் சாரதா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.