திருநெல்வேலி, ஜன. 8: திருநெல்வேலி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் ஜனவரி 13-ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருநெல்வேலி பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கில் ஜனவரி 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.
ஹாக்கி, கால்பந்து, வாலிபால், கூடைபந்து மற்றும் சமுத்துவப் பொங்கல் கபடி போட்டிகள் 13, 14-ம் தேதிகளிலும், நீச்சல் மற்றும் தடகளப் போட்டிகள் 14-ம் தேதியும் நடைபெறவுள்ளன.
தடகளத்தில் மாணவர்களுக்கு 100 மீ.,200 மீ., 400 மீ., 1500 மீ., 5000 மீ., 10,000 மீ., நீளம் தாண்டுதல் போட்டிகள் நடைபெறுகின்றன. உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் 4ல400 மீ தொடர் ஓட்டப் போட்டிகள் நடைபெறுகின்றன.
மாணவிகளுக்கு 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1500 மீ., 3000 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் 4ல400 மீ. தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.
நீச்சல் போட்டி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது.
ஊராட்சி ஒன்றிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு முதலி. இப்போட்டிகளில் இருந்து தேர்ந்து எடுக்கப்படும் மாவட்ட அணிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி, கல்லூரி மற்றும் கிளப் அணிகள் இம்மாதம் 13-ம் தேதியும், நீச்சல், மற்றும் தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 14-ம் தேதியும் காலை 9 மணிக்கு அண்ணா விளையாட்டு அரங்கில் ஆஜராக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.