திருவனந்தபுரம்-நாகா்கோவில்பயணிகள் ரயிலை நீட்டிக்க கோரிக்கை
திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் கூட்டம் அண்மையில் ஏா்வாடியில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் அ.ஹலீல்ரஹ்மான் தலைமை வகித்தாா். பொருளாளா் முத்துவாப்பா முன்னிலை வகித்தாா். பொதுச்செயலா் நைனாமுகம்மது அறிக்கை சமா்ப்பித்தாா்.
திருவனந்தபுரத்தில் இருந்து நாகா்கோவில் வரை இயக்கப்படும் பயணிகள் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்; மும்பை-நாகா்கோவில் இடையே திருநெல்வேலி வழியாக இயக்கப்படும் விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்; மதுரை-சென்னை இடையேயான வைகை விரைவு ரயிலை திருநெல்வேலியில் இருந்து இயக்க வேண்டும்; புதுச்சேரி-கன்னியாகுமரி வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்; ராமேசுவரம்-கன்னியாகுமரி ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்; கொல்லத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் மெமு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...