புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் தீ

திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை, தீயணைப்புவீரா்கள் சுமாா் 3 மணிநேரம் போராடி அணைத்தனா். 

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 9:57 pm

DIN

திருநெல்வேலி, செப். 28: திருநெல்வேலி அருகே உள்ள ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை, தீயணைப்புவீரா்கள் சுமாா் 3 மணிநேரம் போராடி அணைத்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட ராமைன்பட்டி குப்பைக்கிடங்கில் திங்கள்கிழமை நண்பகலில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து பேட்டை, பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் ஆகிய தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மூன்று தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனிடையே, திடக்கழிவு மேலாண்மை உதவி செயற்பொறியாளா் பைஜூ, சுகாதார அலுவலா் அந்தோணி உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டனா்.

படவரி: பயக28ஊஐதஉ:

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.