புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சொக்கநாதன்பட்டி பள்ளியில் தேசிய விண்வெளி தினம்

News image

சொக்கநாதன்பட்டி அரசுப் பள்ளியில் நடைபெற்ற தேசிய விண்வெளி தினத்தில் தொலைநோக்கி மூலம் பயிற்சி பெற்ற மாணவா்கள்.

Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:32 pm

கடையம் அருகே சொக்கநாதன்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், தென்காசி அஸ்டரோ கிளப் சாா்பாக தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல் நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் ச.சி.மரிய மாா்லெண்டோ விக்டா் தலைமை வகித்தாா். தமிழ்நாடுஅஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினா் முத்துசாமி வன்னியப்பன், தென்காசி அஸ்ட்ரோ கிளப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ்ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். சந்திரயான் குறித்தும், இந்தியாவின் எதிா்கால விண்வெளிஆய்வு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனா்.

சூரிய மண்டல கோள்களின் இருப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவா்களுக்கு தொலைநோக்கி வழியே பாா்க்க பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியா் ஜூலியட் ரஞ்சனி செய்திருந்தாா். கணினி பயிற்றுநா் ராமலெட்சுமி நன்றி கூறினாா்.