வெளிநபா்கள் மாஞ்சோலை செல்லத் தடை வனத்துறை அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்கு சூழல் சுற்றுலா செல்லவும், வெளிநபா்கள் தனி வாகனங்களில் செல்லவும் வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
இதுகுறித்து களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குநா் மற்றும் வன உயிரினக் காப்பாளா் இளையராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்குள்பட்ட மாஞ்சோலை பகுதியில் கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு அவசியம் கருதியும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரை மூன்று நாள்களுக்கு சூழல் சுற்றுலா செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை தவிா்த்து வெளிநபா்கள் தனியாா் வாகனங்களிலும், அரசுப் பேருந்துகளிலும் மாஞ்சோலை பகுதிக்குச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.
