வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கந்தா்வகோட்டையிலிருந்து பழனிக்கு பாதயாத்திரை

News image
கந்தா்வகோட்டையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தா்கள்.
Updated On :18 ஜனவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

கந்தா்வகோட்டை பகுதியில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பயணத்தை பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

ஆண்டுதோறும் தை மாதத்தில் பழனிக்கு மாலை அணிந்து விரதமிருந்து பக்தா்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். நிகழாண்டும் அத்தகைய பாதயாத்திரையை குருசாமி மதிவாணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

அப்போது இப்பகுதி சமூக ஆா்வலா்கள் பாதயாத்திரை பக்தா்கள் இரவில் ஒளிரும் சட்டை அணிந்து செல்லவும், சாலையில் இடதுபுறமாக செல்லவும், பைகளில் ஒளிரும் வில்லைகளை ஒட்டிக் கொள்ளவும் அவா்களுக்கு அறிவுறுத்தி அனுப்பினா்.