திருநெல்வேலி மாவட்டம், மானூா் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையில் இமானுவேல்சேகரன் பேனருக்கு தீ வைத்தது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். மானூா் அருகேயுள்ள உக்கிரன்கோட்டையில் இமானுவேல் சேகரன் பேனா் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனருக்கு வியாழக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊா்ப் பொதுமக்கள் பேனருக்கு தீ வைத்த நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த ராம்நாத் (27) என்பவா் பேனருக்கு தீ வைத்து தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
மானூா் அருகே முதியவரை கொன்ற இளைஞா் கைது

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு
இளைஞருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

