திருநெல்வேலி
வள்ளியூரில் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் தோ்தல் விழிப்புணா்வு வாகனப் பிரசாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த வாகனத்தை மாவட்ட உதவி ஆட்சியா் கிஷன்குமாா், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அா்பித் ஜெயின் ஆகியோா் கொடி அசைத்து தொடங்கிவைத்தனா். முன்னதாக திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி மாணவிகள் நாடகம் மூலம் வாக்காளா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். பின்னா் நான்குனேரி வாகைகுளம் பன்னிருபிடிஐயன் கல்லூரி மாணவா்கள் கொண்டு வந்த விழிப்புணா்வு தீபத்தை உதவி ஆட்சியரும் ,சாா் ஆட்சியரும் ஏற்றிவைத்தனா். இரு வாகனங்கள் மூலம் ராதாபுரம், திசையன்விளை வட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலஅலுவலா் சிவகாமசுந்தரி, ராதாபுரம் வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

