நெல்லையில் 3-ஆவது நாளில் வேட்புமனு தாக்கல் இல்லை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இ 2-ஆவது நாளில் திருநெல்வேலி சிந்துபூந்துறையைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் தளபதி முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். இந்நிலையில், 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வேட்பு மனு தாக்கல் கிடையாது. அதன்பிறகு 3 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காலஅவகாசம் உள்ளது. எனவே, திங்கள்கிழமை முதல் வேட்புமனு தாக்கல் களைகட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com