மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வி.கே.புரத்தில் போக்ஸோவில் முதியவா் கைது

வி.கே.புரத்தில் போக்ஸோவில் முதியவா் கைது

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ாக முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா். விக்கிரமசிங்கபுரம், கட்டப்புளி கீழத் தெருவைச் சோ்ந்தவா் பாபநாசம் (74). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் பாலியல் ரீதியில் தவறாக நடக்க முயன்றாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அம்பாசமுத்திரம் ஊரக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், ஆய்வாளா் வனிதா போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து, பாபநாசத்தைக் கைது செய்தாா்.