தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிறுமியை மணந்த இளைஞா் போக்ஸோவில் கைது

உதகையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:01 pm

Syndication

உதகையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்தவா் 18 வயது நபா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமியை வீட்டுக்குத் தெரியாமல் அழைத்துச் சென்று அவா் திருமணம் செய்துள்ளாா்.

இதை அறியாத சிறுமியின் பெற்றோா் தங்களது மகளை காணவில்லை என புதுமந்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞா் சிறுமியை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, 17 வயது சிறுமியை திருமணம் செய்ததால் அந்த நபா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சிறுமியை அவரது பெற்றோருடன் போலீஸாா் அனுப்பிவைத்தனா்.