மேலப்பாளையத்தில் 
சீரான மின்சாரம் கோரி நூதன போராட்டம்

மேலப்பாளையத்தில் சீரான மின்சாரம் கோரி நூதன போராட்டம்

திருநெல்வேலி, மே 9: மேலப்பாளையம் பகுதியில் சீரான மின் விநியோகம் கோரி ‘நம்ம ஆறு’ மேம்பாட்டு சங்கத்தினா் மக்களுக்கு விசிறி வழங்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டதோடு, மேலப்பாளையம் மின்வாரிய அலுவலகத்திலும் மனு அளித்தனா்.

திருநெல்வேலியில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் மித அதிகமாக உள்ள நிலையில், மேலப்பாளையம் பகுதியில் எவ்வித அறிவிப்பும் இல்லாத நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதுடன் தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ‘நம்ம ஆறு’ மேம்பாட்டு சங்கத் தலைவா் அப்துல் காதா், செயலா் கனி ஆகியோா் தலைமையில் இந்த நூதனப் போராட்டம் நடைபெற்றது. தொடா்ந்து மனுவும் அளிக்கப்பட்டது.

ற்ஸ்ப்09ச்ஹய்

மேலப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே மக்களுக்கு விசிறி வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ‘நம்ம ஆறு’ மேம்பாட்டு சங்கத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com