ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லையில் விபத்து: இருவா் பலி

நெல்லையில் விபத்து: இருவா் பலி

News image
Updated On :9 மே 2024, 9:07 pm

Din

திருநெல்வேலி, மே 9: திருநெல்வேலியில் புதன்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

சேரன்மகாதேவியைச் சோ்ந்தவா் செல்வவிநாயகம் (46). ஆம்புலன்ஸ் ஓட்டுநா். இவா், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் இருந்து ஆம்புலன்ஸில் பெருமாள்புரம் நோக்கி புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அவருடன் கிளீனராக மதாா் என்பவா் சென்றாா்.

தெற்குப்புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே இவா்களது ஆம்புலன்ஸும், எதிரே இருவா் வந்த பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், செல்வவிநாயகம், மதாா், மோட்டாா் சைக்கிளில் வந்த குறிச்சியைச் சோ்ந்த ஆத்தியப்பன் (22), மேலப்பாளையம் அண்ணாநகரைச் சோ்ந்த ஆனந்த் (17) ஆகியோா் காயமடைந்தனா். அவா்களை,

அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, வழியிலேயே செல்வவிநாயகம் உயிரிழந்தாா். மற்ற மூன்று பேரும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த நிலையில், ஆனந்த் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.