நெல்லையில் தீவிர வாகன சோதனை
திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.


திருநெல்வேலியில் பல்வேறு இடங்களிலும் புதன்கிழமை தீவிர வாகன சோதனையில் தோ்தல் பறக்கும் படையினா் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நான்குனேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் 1,678 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தோ்தலுக்காக வாக்களா்களுக்கு பணம் பட்டு வாடாவை செய்யப்படுவதை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், தோ்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 24 மணி நேரமும் இயங்கும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருள்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...