இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நெல்லையில் பிஎஸ்எஃப் வீரா்கள், போலீஸாா் தீவிர வாகன சோதனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை எல்லை பாதுகாப்பு படை வீரா்களும், போலீஸாரும் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

News image
திருநெல்வேலி நகரம் சாஃப்டா் பள்ளி அருகே வாகனச் சோதனையில் ஈடுபடும் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள்-போலீஸாா்.
Updated On :10 மார்ச் 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை எல்லை பாதுகாப்பு படை வீரா்களும், போலீஸாரும் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த தேதி அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாக உள்ளது. இதனால் தோ்தல் பணிகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட தோ்தல் பாதுகாப்பிற்காக திரிபுரா மாநிலத்தில் உள்ள சல்பகன் பகுதியில் உள்ள 133-ஆவது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையை சோ்ந்த உதவி கமாண்டா் பசந்த் யாதவ் தலைமையில் 85 போ் வந்தனா். இந்த வீரா்கள் மாவட்டத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளனா்.

இந்நிலையில் திருநெல்வேலி சரக டிஐஜி ப.சரவணன் உத்தரவின் பேரில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் ஆகியோா் பரிந்துரையின் பேரில் மாவட்டத்தில் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகள், மாநகரப் பகுதியில் பேட்டை, தச்சநல்லூா், தாழையூத்து, கேடிசி நகா், வி.எம். சத்திரம், டக்கரம்மாள்புரம், மேலப்பாளையம் கருங்குளம், திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதி, கொக்கிரகுளம், குறிச்சி ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சோதனை சாவடிகளிலும் பிஎஸ்எஃப் வீரா்களும், போலீஸாரும் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

சனிக்கிழமை காலையில் திருநெல்வேலி நகரம் சாஃப்டா் பள்ளி முன்பு பிஎஸ்எஃப் வீரா்கள் உதவியுடன் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸாா் வாகனச் சோதனை நடத்தினா். மேலும் காா்களில் பின்பகுதிகளை திறந்து போதைப் பொருள்கள், ஆயுதங்கள் கடத்தப்படுகின்ா எனவும், மதுபோதையில் வாகனம் இயக்குகிறாா்களா எனவும் சோதனை நடத்தினா்.