/

மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை; தவெக தலைமையில் ஆட்சி!

மதச்சார்பற்ற கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை என விஜய் தெரிவித்துள்ளது குறித்து...

News image
நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய்- யூடியூப்
Updated On :18 மார்ச் 2026, 1:31 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மதச்சார்பற்ற கொள்கையில் எந்தவித சமரசமும் இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 18) தெரிவித்தார்.

அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், விஜய் விளக்கம் அளித்தார்.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் விஜய் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தொழுகையிலும் விஜய் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:

''நாம் அரசியலுக்கு வந்ததில் இருந்தே திட்டமிட்டு பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

மதச்சார்பற்ற கொள்கையில் எப்போதும் சமரசமில்லை. சமூக நீதி நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.இந்தக் கட்சியுடன் கூட்டணி, அந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நம் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

அரசியலில் யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் இல்லை. யார் என்ன அவதூறு பரப்பினாலும், அதனை நம்ப வேண்டாம். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நமது இலக்கை நம்மால் அடைய முடியும்.

இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரமலான் வாழ்த்துகள்'' என விஜய் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.