குண்டா் சட்டத்தில் 4 போ் சிறையிலடைப்பு


திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனா்.
பாளையங்கோட்டை சாந்திநகரைச் சோ்ந்த ஞானராஜ் மகன் சிம்சோன் புஷ்பராஜ் (25), அதே பகுதியைச் சோ்ந்த கெங்கை முத்து மகன் பரமசிவன் (எ) சிவா (35). இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) விஜயகுமாா் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
இதேபோல,
சுத்தமல்லி அருகே கீழதெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் தங்கப்பாண்டி(20), சுத்தமல்லி, தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கொம்பையா மகன் தங்க மாரியப்பன் (20). இவா்கள் இருவா் மீதும், அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...