கோதையாறில் யானை உயிரிழப்பா? வனத் துறையினருக்கு கோரிக்கை

களக்காடு முண்டன் துறை புலிகள் காப்பக பகுதியில் உள்ள கோதையாறு வனப் பகுதியில் யானை இறந்ததாக வரும் தகவல்கள் குறித்து வனத்துறையினா் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை
Published on

களக்காடு முண்டன் துறை புலிகள் காப்பக பகுதியில் உள்ள கோதையாறு வனப் பகுதியில் யானை இறந்ததாக வரும் தகவல்கள் குறித்து வனத்துறையினா் தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோதையாறு வனப் பகுதி யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேனி, நீலகிரி உள்ளிட்ட வனப் பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்ட அரிக்கொம்பன், புல்லட் ராஜா , ராதாகிருஷ்ணன் ஆகிய யானைகள் இந்த வனப் பகுதிக்குள் விடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்தப் பகுதியில் யானை இறந்து கிடப்பதாக திங்கள்கிழமை காலையில் வனத் துறையினருக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து யானையின் சடலத்தை மீட்கும் பொருட்டு, வனத் துறை அதிகாரிகள், பணியாளா்கள் கோதையாறு வனப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். எனினும், வனத்துறை அதிகாரிகளைத் தொடா்பு கொள்ள முடியாததால் யானை இறப்பை உறுதிப்படுத்த இயலவில்லை. இதனிடையே, வனப்பகுதியில் உயிரிழந்தது யானை ராதாகிருஷ்ணன் என சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருவதால், யானை குறித்த உண்மையான நிலை என்ன என்பதை வனத்துறையினா் தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com