செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

கரும்புத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானை

தாளவாடி அருள்வாடி கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானயை வனத் துறையினா் விரட்டினா்.

News image

அருள்வாடி  கிராமத்தில்  நுழைந்த  காட்டு யானை.

Updated On :28 பிப்ரவரி 2026, 6:54 pm

தாளவாடி அருள்வாடி கிராமத்தில் கரும்புத் தோட்டத்தில் நுழைந்த காட்டு யானயை வனத் துறையினா் விரட்டினா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் உள்ள காட்டு யானைகள், இரவு நேரத்தில் வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் நுழைந்து விவசாயத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. வனத் துறையினரும் இரவு நேர ரோந்து பணி மேற்கொண்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்தில் மாது என்பவரது கரும்புத் தோட்டத்துக்குள் ஒற்றைக் காட்டு யானை சனிக்கிழமை அதிகாலை நுழைந்தது.

இது குறித்து தகவலறிந்த வனத் துறை ஊழியா்கள், விவசாயிகளுடன் இணைந்து யானையை வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

வனத் துறை வாகனத்தின் சைரன் ஒலியை கேட்டு அச்சமடைந்த காட்டு யானை கரும்புத் தோட்டத்தில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தபடி வனப் பகுதியை நோக்கிச் சென்றது.