பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

News image

ஆனந்தபுரம் கிராமத்துக்குள் சுற்றித்திரிந்த யானை.

Updated On :6 ஏப்ரல் 2026, 1:59 am IST

தாளவாடியை அடுத்த ஆனந்தபுரம் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை பகல் காட்டு யானை நுழைந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.

கோடைக் காலம் தொடங்கியதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தாளவடி மலைப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, ஆனந்தபுரம் கிராமத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்து, வீடுகளிலேயே முடங்கினா். இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினா்.