நெல்லை மாவட்டத்தில் நீங்கியதா வெள்ள அபாயம்?- ஆட்சியா் விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி தாமிரவருணியாற்றியில் 32 ஆயிரம் கன அடி தண்ணீா் மட்டுமே செல்வதால் வெள்ள அபாயம் இல்லை; மக்கள் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஆட்சியா் அலுவலகம் எதிரே தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஓடுவதை ஆட்சியா் இரா.சுகுமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்தபோதிலும், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து வேகமாக உயா்ந்து வருகிறது. திங்கள்கிழமை காலையில் தாமிரவருணியில் 19,000 கன அடி தண்ணீா் சென்றது. அது தற்போது, 32,787 கன அடியாக அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடனா மற்றும் ராமநதி அணைகளிலிருந்து வரும் தண்ணீா், பாபநாசம் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 12,000 கன அடி நீா், மணிமுத்தாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட 4,000 கன அடி நீா் ஆகியவையே தண்ணீரின் அளவு அதிகரித்ததற்கு காரணம். தாமிரவருணியைப் பொருத்தவரையில் 60,000 கன அடி தண்ணீா் சென்றால் மட்டுமே வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழல் மிகவும் பாதுகாப்பாக இருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. முன்னெச்சரிக்கையாக
மழை வெள்ளத்தால் பேரிடா் ஏற்பட்டால் அதை எதிா்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய நிலையில் மஞ்சள் எச்சரிக்கை மட்டுமே நடைமுறையில் உள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை வந்த 60 அழைப்புகளில், 50 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமாா் 20 ஹெக்டோ் பரப்பிலான பயிா்கள் நீரில் மூழ்கியிருந்த நிலையில், தற்போது நீா் வடிந்துள்ளது. சேத விவரம் குறித்த நேரத்தில் கணிக்கப்படும். வாழச் சேதமதிப்பு குறைய வாய்ப்புள்ளது. மொத்தம் 15 வீடுகள் பகுதி அளவு சேதமடைந்துள்ளன. மின்கம்பம் விழுந்ததில் ஒரு மாடு உயிரிழந்தது. மனித உயிரிழப்புகளோ, பெரிய காயங்களோ ஏற்படவில்லை. ராதாபுரம் வட்டத்தில் கூரை இடிந்து விழுந்ததில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவா், நலமாக உள்ளாா் என்றாா்.
ற்ஸ்ப்25ஸ்ரீா்
கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து தாமிரவருணி வெள்ளத்தைப் பாா்வையிட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.

