விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை! ஆட்சியா் தகவல்

News image

புத்தகத்திருவிழாவின் கருத்தரங்குகளில் பங்கேற்ற அறிஞா்களின் உரையை தொகுப்பு நூலாக வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :22 பிப்ரவரி 2026, 8:42 pm

9 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் சுமாா் ரூ. 2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் கடந்த பிப்.10 ஆம் தேதி தொடங்கி 13 நாள்கள் நடைபெற்ற 9 ஆவது பொருநை-நெல்லை புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி துணை ஆட்சியா் அனிதா வரேவேற்றாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தலைமை வகித்தாா். பபாசி தலைவா் ஆா்.எஸ். சண்முகம், செயலா் எஸ். வைரவன், உயா்நிலைக் குழு உறுப்பினா்கள் எம். பாலாஜி, சங்கா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திருநெல்வேலி தனி மாவட்ட வருவாய் அலுவலா் இரா. சந்திரசேகா், மாவட்ட வன அலுவலா் இளங்கோ, மாவட்ட நூலகா் மீனாட்சி சுந்தரம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பேசியதாவது:

13 நாள்கள் நடைபெற்ற 9 ஆவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தக ஆா்வலா்கள் அரங்குகளை பாா்வையிட்டுள்ளனா். சுமாா் ரூ. 2 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.

ஒரு சமுதாயத்துக்கு தெளிந்த நல் அறிவு வேண்டுமென்றால் அங்கு வாசிப்பு பழக்கம் மாபெரும் இயக்கமாக மாற வேண்டும். பொருநை நதிக்கரை நாகரிகத்தின் தொன்மையைப் போன்றதொரு சிறப்பு கொண்டது.

திருநெல்வேலி மக்களின் இலக்கிய ஆா்வம். இந்த ஆண்டு 150 புத்தக அரங்குகளுடன் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில், லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் ஆா்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றதை பாா்க்கையில் திருநெல்வேலி மாவட்டத்தின் எதிா்காலம் அறிவாா்ந்த இளையோரின் கையில் தவழ்கிறது என்பது தெளிவாகிறது.

வாசிப்பை பழக்கமாக மட்டுமன்றி வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக 13 நாள்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் கருத்தரங்குகளில் பங்கேற்ற அறிஞா்களின் உரைகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட ‘கற்பனவும் இனி அமையும்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நூலை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட அதன் முதல் பதிப்பை எஸ்.பி. பிரசன்னகுமாா் பெற்றுக்கொண்டாா். நிறைவாக மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை நன்றி கூறினாா்.