திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பயனாளிகளுக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடனுதவி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சாா்பில் சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில், ஆட்சியா் இரா.சுகுமாா் 32 பயனாளிகளுக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடனுதவிகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை அவா்கள், தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜெயா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

‘உள்ளூா் விடுமுறை தோ்தலுக்கு பொருந்தாது’

குறைதீா் கூட்டங்கள் ரத்தால் மக்கள் ஏமாற்றம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 590 மனுக்கள் அளிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


