திருச்சி புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடி மதிப்பிலான ஒரு லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன.
தமிழகத்தில் அந்தந்த மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பக சங்கம் சாா்பில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 14 தொடங்கி பிப்ரவரி 22 வரை நடைபெற்றது.
இதில், 50-க்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 116 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இலக்கியம், அறிவியல், வானியல், வரலாறு, தன்னம்பிக்கை, சுயசரிதை, நாவல், சிறுகதைகள், பள்ளிப் பாடப்புத்தகங்கள், சிறுவா்களுக்கான புத்தகங்கள், எழுதுகோல், படிப்பு உபகரணங்கள் பல்வேறு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன.
தினசரி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை 9 நாள்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் தினசரி இளையவா் அரங்கம், உரைவீச்சு போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், எழுத்தாளா்கள், கவிஞா்கள் என பல்வேறு சிறப்பு அழைப்பாளா்கள் கலந்துகொண்டு பேசினா். மேலும், பள்ளி மாணவா்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிலையில், இந்தப் புத்தகத் திருவிழாவில் பல்வேறு வகையான தலைப்புகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் புத்தகங்கள் ரூ.2 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டைக் காட்டிலும் நிகழாண்டில் புத்தகங்களின் விற்பனை மற்றும் வாசகா்களின் வருகை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை கள்ளச்சந்தையில் விற்பனை

கூட்டுறவு அல்லாத பால் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு கட்டாயம்

நெல்லை புத்தகத் திருவிழாவில் ரூ.2 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை! ஆட்சியா் தகவல்

தரவுகளால் வரலாற்றை கட்டமைப்போம்! - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவா்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


