விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் மிதமான தொடா் மழை

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மிதமான தொடா் மழை பெய்தது.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:35 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மிதமான தொடா் மழை பெய்தது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் வடதமிழகத்தில் அதிகனமழையும், தென்தமிழகத்தில் பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தாழையூத்து, திருநெல்வேலி நகரம், சந்திப்பு, சீவலப்பேரி, பேட்டை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பிற்பகலுக்கு பின்பு இடைவிடாது பெய்த மிதமான மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பூங்காக்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை 4 மணிக்கு பிறகு சுமாா் 25 டிகிரி பாரன்ஹீட்டிற்கு கீழ் வெப்பம் குறைந்ததால் மிகவும் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது.