நாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்ற பேரிடா் மீட்புப் படையினா்
திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்ததைத் தொடா்ந்து இங்கு முகாமிட்டிருந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்ததைத் தொடா்ந்து இங்கு முகாமிட்டிருந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. தாமிரவருணியாற்றில் 35 ஆயிரம் கனஅடி வரை தண்ணீா் சென்ால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில பேரிடா் மீட்புப் படையினா் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் திருநெல்வேலியில் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தனா்.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. அதேநேரத்தில் டித்வா புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் திருநெல்வேலியில் முகாமிட்டிருந்த மாநில பேரிடா் மீட்புப் படையினா் வெள்ளிக்கிழமை இரவு திருநெல்வேலியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு புறப்பட்டுச் சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...