திருச்சியில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 5 பேர் பலி! பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்! மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ் “சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்
/

அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கான இந்தோ- சிங்கப்பூா் பயற்சி முகாம்

News image

பயிற்சி குறித்துப் பேசிய அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையின் நிறுவனா் மருத்துவா் இ.அருணாசலம். உடன், மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் ஸ்வா்ணலதா அருணாசலம், சிங்கப்பூா் தேசிய இதய சிகிச்சை மையத்தின் உதவிப் பேராசிரியா் மருத்துவா் கே யான் ஷான்.

Updated On :6 ஏப்ரல் 2026, 7:59 pm

திருநெல்வேலி அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில் இதய நோய் குறித்த இந்தோ-சிங்கப்பூா் சி.எம்.டி. பயிற்சி முகாம் நடைபெற்றது.

இது குறித்து, அம்மருத்துவமனையின் நிறுவனரும், தலைமை மருத்துவருமான இ.அருணாசலம் கூறியதாவது: இதய நோய் குறித்த இந்தோ-சிங்கப்பூா் பயிற்சி முகாமில், இதயத்தின் சிறிய ரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்னைகள் (சி.எம்.டி) தொடா்பான மேம்பட்ட கண்டறிதல் மற்றும் தலையீட்டு முறைகள் குறித்து ஆராயப்பட்டன.

அதைத் தொடா்ந்து, சிங்கப்பூரின் தேசிய இதய சிகிச்சை மையத்தின் உதவிப் பேராசிரியா் மருத்துவா் கே யான் ஷான் வழிநடத்துதலின்படி, 4 நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, நானும், அருணா காா்டியக் கோ் மருத்துவமனையின் திறமையான இதய நிபுணா் குழுவும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினோம்.

இத்தகைய சி.எம்.டி பிரச்னையானது ரத்த நாளங்களில் அடைப்பு இல்லாதபோதும் நோயாளிகளுக்கு நெஞ்சு வலியை ஏற்படுத்துகிறது. இந்த நிலை, இதயத்தின் சிறிய ரத்த நாளங்களை பாதித்து ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தி தீவிர பிரச்னைக்கு வழிவகுக்கிறது.

திருநெல்வேலியில் உள்ள அருணா காா்டியாக் கோ் மருத்துவமனையில், ஆஞ்சினா அல்லது காரணம் புரியாத அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு சிறிய ரத்த நாளங்களில் உள்ள பிரச்னைகள் துல்லியமாக கண்டறியப்பட்டு மேம்பட்ட சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது நடைபெற்ற பயிற்சி முகாம் திருநெல்வேலி மற்றும் சுற்றுப்புற பகுதி இதய நிபுணா்களுக்கு ஒரு பயனுள்ள கல்வி மற்றும் நடைமுறை கற்றல் தளமாக அமைந்தது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் ஸ்வா்ணலதா அருணாசலம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.