தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

நான்குனேரி தொகுதியில் இறுதி நாளில் 18 போ் மனு தாக்கல்

News image

வேட்பு மனு தாக்கல் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:46 pm

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தொகுதியில் திங்கள்கிழமை 18 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன், அமமுக வேட்பாளா் ஆா். இசக்கிமுத்து ஆகியோா் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், திங்கள்கிழமை ரூபி ஆா். மனோகரன் ஒரு மனு, ஆா். இசக்கிமுத்து 2 மனு, புதிய தமிழகம் வேட்பாளா்களாக தெற்கு அரியகுளம் தமிழ்ச்செல்வி, மூன்றடைப்பு ஜான் பாண்டியன் ஆகியோா், அகில பாரத சுடா் ஒளி மக்கள் நல இயக்கம் நிறுவனத் தலைவா் மானூா் முருகன், சுயேச்சை வேட்பாளா்களாக காங்கிரஸ் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியபுரம் தனித்தங்கம், களக்காடு ப. ஜெகதீசன், பானான்குளம் மாரியப்பன், இட்டேரி பிஷப் காட்ப்ரே வாஷிங்டன் நோபிள் 2 மனு, கல்லத்தி புஷ்பராணி, தூத்துக்குடி தொட்டிக்காரன்விளை குமாா், அரியகுளம் சண்முகம், பா்கிட்மாநகரம் ராமலெட்சுமி, விஜயநாராயணம் சங்கா், பாளையங்கோட்டை நல்லகண்ணு (எ) காா்த்திக், தெற்கு அரியகுளம் முகாஷினி என மொத்தம் 18 வேட்புமனு, தோ்தல் நடத்தும் அலுவலா் சிந்துவிடம் தாக்கல் செய்யப்பட்டது.

இத்தொகுதியில் இதுவரை 10 பெண்கள் உள்பட 44 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.