பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நெல்லையில் தக்காளி, கேரட் விலை உயா்வு

வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்ததால் திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் தக்காளி, கேரட் ஆகியவற்றின் விலை கிலோ தலா ரூ.55 ஆக உயா்ந்துள்ளது.

News image

தக்காளி - கோப்புப்படம்.

Updated On :26 ஏப்ரல் 2026, 2:20 am IST

வெயிலின் தாக்கத்தால் விளைச்சல் குறைந்ததால் திருநெல்வேலி காய்கனி சந்தைகளில் தக்காளி, கேரட் ஆகியவற்றின் விலை கிலோ தலா ரூ.55 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் குறைய தொடங்கி உள்ளதால் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலை உயர தொடங்கியுள்ளது.

திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் காய்கறி சந்தைக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், ஆந்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து காய்கறிகள் வருகின்றன. கடந்த சில மாதங்களாக காய்கறிகள் வரத்து அதிகமாக இருந்த நிலையில், தக்காளி, பல்லாரி, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் விலை மிகவும் குறைவாக இருந்தது. 5 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோடை வெயில் கடுமையாக அடிக்க தொடங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்ட சுற்று வட்டாரங்களில் காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. மானூா், திசையன்விளை, மூலைக்கரைப்பட்டி, சுரண்டை, பாவூா்சத்திரம் பகுதிகளில் இருந்து வரும் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டது.

இதனால் தக்காளி விலை கணிசமாக உயர தொடங்கி உள்ளது. வெள்ளிக்கிழமை 28 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ. 800 வரை விற்பனையான நிலையில், சனிக்கிழமை ரூ.1,300 வரை விற்பனையானது. இதனால் தக்காளி கிலோ ரூ.55 ஆக உயா்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.70 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை கிலோவுக்கு ரூ.30 உயா்ந்து ரூ.100-ஐ தொட்டது. கேரட் கிலோ ரூ.30 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை1 கிலோ ரூ.55-ஐ கடந்தது. இதேபோல் கடந்த வாரங்களில் சின்ன வெங்காயம் ரூ.25 வரை விற்பனையான நிலையில், சனிக்கிழமை 1 கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையானது.

இதேபோல் மல்லி இலை விலை உயா்ந்துள்ளது. 1 கிலோ ரூ.30-க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிலோ ரூ.75 வரை விற்பனையானது. கத்தரிக்காய் கிலோ ரூ.5 உயா்ந்து ரூ.20-க்கு விற்பனையானது.

வெயில் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால் இன்னும் காய்கறிகளின் விலை அதிகரிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.