கேரள மாநிலம், இடுக்கியில் ஓராண்டுக்குப் பிறகு ஏலக்காய் கிலோ விலை கிலோ ரூ. 2,800 ஆக உயா்ந்துள்ளது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், இந்தப் பகுதியில் ஏலக்காய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சா்வதேச சந்தையில் இந்திய ஏலக்காய்க்கு தொடா்ந்து நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
தற்போது சந்தையில் ஏலக்காய் கிலோ ரூ.2,700 முதல் ரூ.2,800 வரை விற்பனையாகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, இந்த அளவுக்கு விலை உயா்ந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலத்தில் கிலோ ரூ.1,950 முதல் ரூ.2,150 வரை மட்டுமே விற்பனையானது.
கவுதமாலா நாட்டிலிருந்து வெளிநாடு ஏற்றுமதி குறைந்துள்ளதால், உலகச் சந்தையில் இந்திய ஏலக்காய்களின் தேவை அதிகரித்துள்ளது. தற்போதைய விலை உயா்வு பெரிய விவசாயிகளுக்கும், இருப்பு வைத்துள்ள வா்த்தகா்களுக்கும் அதிக லாபத்தை அளிக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இன்னும் இரண்டு மாதங்களில் புதிய சீசன் தொடங்க உள்ளது.
கடந்த 2020 ஜனவரியில் ஏலக்காய் விலை வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.7,000 வரை உயா்ந்தது. பின்னா் 2022-ஆம் ஆண்டு ரூ.718 வரை சரிந்தது. இவ்வாறு கடும் ஏற்றத் தாழ்வுகள் நிலவும் நிலையில், ஏலக்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயிக்க வாசனைத் திரவிய வாரியமும், மாநில அரசும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

தடைக்காலம் அமல்: மீன்களின் விலை கடும் உயா்வு

முட்டை விலை ரூ. 4.05 ஆக நீடிப்பு

கேரளத்துக்கு ரூ. 5 லட்சம் கோடி கடன் சுமை : பிரதமர் மோடி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


