அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கூடங்குளம் 1ஆவது அணுஉலையில் மின்உற்பத்தி நிறுத்தம்

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 4:57 am IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகா வாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

மேலும் 3-வது அணுஉலைக்கான கட்டுமானப்பணிகள் முடிவடைந்து மின்உற்பத்தி செய்வதற்கான பிரதான பணிகள் நடைபெற்று வருகிறது. 4, 5,6 அணுஉலைகளுக்கான கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் முதலாவது அணுஉலையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்ப கோளாறை சீரமைக்கும் பணியில் அணுவிஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநா்களும் ஈடுபட்டு வருகின்றனா்; விரைவில் பழுது நீக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும் என அணுமின்நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.

முதலாவது அணுஉலை இயங்காததால் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வந்த 576 மெகாவாட் மின்சாரத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.