சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தொழில்நுட்பக் கோளாறு..

 Koodankulam

கூடங்குளம் - video crop

Published On :

​கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய ரஷிய நாட்டின் உதவியுடன் தலா இரண்டு அணு உலைகள் மூலம் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இரண்டு அணு உலைகளிலிருந்தும் மொத்தமாக 1152 மெகாவாட் மின் உற்பத்தி தமிழகத்திற்குக் கிடைக்கிறது. இதன் விளைவாக, அந்த அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 576 மெகாவாட் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

அணு உலையின் கண்டன்சர் குளிரூட்டும் நீர் இறைப்பானில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது .ஏற்கெனவே, தமிழ்நாட்டில் ஒரு நாள் மின் தேவை 19 ஆயிரம் மெகா வாட்டாக இருந்து வருகிறது. கோடைக்காலத்தில் மின் சாதனங்களில் பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக நாள் ஒன்றிய மின்சார தேவை 21,000 மெகாவாட்டாக எட்ட இருக்கும் நிலையில் தற்பொழுது கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தடைப்பட்டது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்தப் பழுதை விரைந்து சரிசெய்யும் பணிகளில் கூடங்குளம் அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Summary

Power generation at the Koodankulam Nuclear Power Plant has been temporarily halted due to a sudden technical glitch in its first reactor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.