அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

மின் தடை வெறும் தடையல்ல.. மக்களின் அன்றாட ஓட்டத்துக்கு போடும் பிரேக்!

மின் தடை வெறும் தடையல்ல மக்களின் அன்றாட ஓட்டத்துக்கு போடும் பிரேக் என்பது பற்றி..

News image

மின் தடை - file photo

Updated On :11 ஜூன் 2026, 11:49 am IST

சென்னை மாநகரில் மக்கள் அன்றாடம் பேசும் விவகாரங்களில் ஒன்றாக மின் தடை சேர்ந்துகொண்டது. ஏற்கனவே கொளுத்தும் வெய்யிலுக்கு இடையே என்னதான் மின் விசிறி சுழன்றாலும் காற்று போதாமல் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், மின் தடை ஒருபக்கம் மக்கள் வெறுப்பேற்றி வருகிறது.

மின் தடை பற்றி குறைகூறினாலே.. மின் தடை இதுவரை ஏற்பட்டதே இல்லையா? முந்தைய ஆட்சிகளில் மின் தடையைப் பார்த்ததில்லையா? என்ற கேள்விகளும் வந்து சேர்ந்துவிடுகின்றன.

ஆனால், மின் தடை என்பது ஒரு பிரச்னை அல்ல. அதனால் ஏற்படும் அடுக்கடுக்கான பிரச்னைகள் மக்களின் வாழ்க்கை சுழற்சியையே பிரேக் போட்டு நிறுத்தி விடுகிறது.

பகலில் ஏற்படும் மின் தடை காரணமாக சமையல் செய்வது, மோட்டர் போடுவது, துணி துவைப்பது, தையல் இயந்திரங்களில் துணி தைப்பது என அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் போகிறது.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாராக 25 நாள்களுக்கும் மேல் இந்த மின் தடை பிரச்னை உள்ளது. இப்படி அன்றாடப் பணிகளை செய்ய அத்தியாவசியமான மின்சாரம் தடைபட்டால், பணிகளும் தடைபடுகின்றன.

முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை. மின் தடை ஏற்பட்டால் ஏதோ 10 அல்லது 20 நிமிடங்கள் இல்லாமல் பல மணி நேரம் தடைபடுகிறது.

பகலில் இவ்வாறு என்றால் இரவில் சொல்லவே வேண்டாம் என்கிறார்கள் மக்கள். முன்பெல்லாம் தண்ணீர் குடங்களுடன் பகலில் சாலை மறியல் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போதோ மின் தடைக்காக இரவில் சாலை மறியல்கள் நடக்கின்றன.

சில இடங்களில் மின்சார சேவை இருந்தாலும் அதில் ஒரு நிலையற்றத் தன்மை காணப்படுகிறது. இது மின் தடையை விடக் கொடுமையானது.

அம்பத்தூர், மேனாம்பேடு உள்ளிட்டப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மின் தடை ஏற்பட்டு 12 மணிக்குப் பிறகுதான் வந்தது. இதனால் கைக் குழந்தைகள் கதறி அழுதன. முதியவர்கள் காற்றும் இல்லாமல் வெளியே செல்லவும் முடியாமல் அவதிப்பட்டனர். வாகன ஓட்டிகள் சாலைகளில் மிகவும் அச்சத்துடன் பயணித்தனர்.

12 மணி வரை மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல், காலையில் பள்ளி, கல்லூரி, பணிக்குச் செல்வோர் மிகவும் அசதியாகவே எழுந்துப் புறப்பட்டுச் சென்றனர்.

கைக் குழந்தைகள், பள்ளிச் செல்லும் சிறு குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் நிலைதான் மிகவும் மோசம். குழந்தைகள் சரியாக தூங்காமல் போனால், காலையில் அவர்களை எழுப்ப முடியாது. பள்ளிக்குச் சென்றாலும் தூங்கி விடுவார்கள் என்று பயம் இருக்கும்.

சிலிண்டர் தட்டுப்பாடால் இன்டக்ஷனுக்கு மாறிய மக்கள்

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பலரும் இன்டக்சன் ஸ்டவ் மூலம் சமைத்து வருகிறார்கள். இதுபோன்ற மின் தடை சமையல் செய்வதையே சவாலாக்கி விடுகிறது.

காலையில் ஏற்படும் மின் தடை

காலை 6 மணிக்கு மின் தடை ஏற்பட்டால் பல இடங்களில் 8 மணி வரை திரும்புவதில்லை. இதனாலை காலையில் சமையல் செய்வது மட்டுமல்ல, பல வேலைகள் பாதிக்கப்படுகின்றன. இதுவரை அதிகாரிகளின் சரியான தொலைபேசி எண்களும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

மின் தடைக்கான காரணங்களை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் தடை பற்றி மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல் இவ்வாறு செயல்படுவது மின் வாரிய நிர்வாகத்துக்கும் நல்லதல்ல.

Summary

On the fact that a power outage is not merely an interruption, but a brake applied to the daily rhythm of people's lives...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.