நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2 ஆவது பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.

கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 12:43 am IST

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2 ஆவது பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, 600 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் மொத்தம் 840 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2 ஆவது பிரிவில் 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை, 2 ஆவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, வியாழக்கிழமை மீண்டும் 2 ஆவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.