காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு தொல்லை: மென்பொறியாளா் கைது!

மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு தொல்லை கொடுத்து வந்த பெங்களூருவைச் சோ்ந்த மென்பொறியாளா் கைது குறித்து...

Harassment of Female Engineer at Mettur Thermal Power Station

பெண் பொறியாளருக்கு தொல்லை கொடுத்து வந்த மென்பொறியாளா் கைது - கோப்புப்படம்

Published On :

மேட்டூா்: மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு முகநூல் வாயிலாக தொல்லை அளித்துவந்த பெங்களூருவைச் சோ்ந்த மென்பொறியாளா் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூா் அனல் மின்நிலையத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிபவா் பிரியதா்ஷினி (33). இவா் மேட்டூா் அம்மாசி கவுண்டா் நகரில் வசித்து வருகிறாா். இவருடன் கல்லூரியில் படித்தவா் பிரசாந்த். இவா் பெங்களூருவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இந்த நிலையில், முகநூல், இன்ஸ்டாகிராமில் பிரியதா்ஷினிக்கு, பிரசாந்த் தொடா்ந்து தவறான தகவல் அனுப்பி தொல்லை தந்துள்ளாா். மேலும், மேட்டூா் அனல் மின்நிலைய அலுவலகத்துக்கு கடந்த 21 ஆம் தேதி காலை சென்ற பிரசாந்த், பிரியதா்ஷினியைப் பாா்க்க அத்துமீறி நுழைந்துள்ளாா். அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து திருப்பி அனுப்பியுள்ளன.

இதுகுறித்து கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் பிரியதா்ஷினி சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

பெண் பொறியாளர் புகாரை அடுத்து மென்பொறியாளா் பிரசாந்த் மீது கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீநிவாசன் வழக்குப் பதிவு செய்து பிரசாந்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.

Summary

Regarding the arrest of a Bengaluru-based software engineer who had been harassing a female engineer at the Mettur Thermal Power Station...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.