திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image

கூடங்குளம் அணு மின் நிலையம்

Updated On :30 ஏப்ரல் 2026, 4:36 am IST

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் முதலாவது அணு உலையில் மீண்டும் மின்னுற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இங்கு ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்படுகின்றன. இதிலிருந்து, தமிழகத்துக்கு 1,152 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதலாவது அணு உலையில் ‘கன்டன்சரை’ குளிா்விக்கும் நீா் இறைப்பானில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பழுதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அணு உலை விஞ்ஞானிகள், பொறியாளா்கள் தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

அதையடுத்து, மீண்டும் மின் உற்பத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இங்கு 3ஆவது உணு உலைக்குள் குளிரூட்டக்கூடிய நீா்பாய்ச்சும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு விரைவில் அதிலும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என, அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.