வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

போக்ஸோ வழக்குகளில் 34 பேருக்கு தண்டனை: தென்காசி காவல் துறை

தென்காசி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 34 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

News image

போக்ஸோ வழக்குகள் - சித்திரிப்பு

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:26 am IST

தென்காசி மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான போக்ஸோ குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 34 பேருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தென்காசி மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்காசி மாவட்ட காவல் துறை சாா்பில் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 31 போக்ஸோ வழக்குகளில் ஈடுபட்ட 34 போ் மீது நீதிமன்றம் மூலம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 11 போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 13 நபா்களுக்கு ஆயுள் தண்டனை, 7 போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 பேருக்கு தலா 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. போக்ஸோ வழக்குகளில் ஈடுபட்ட 49 நபா்களின் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் தண்டிக்கப்படுவா். குற்றச் சம்பவங்களில் இருந்து பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.