ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

இபிஎஃப் திட்டத்தில் விடுபட்ட தொழிலாளா்கள் சேர வாய்ப்பு

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் (இபிஎஃப்) விடுபட்டவா்களை சோ்க்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Published On :

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் (இபிஎஃப்) விடுபட்டவா்களை சோ்க்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வருங்கால வைப்புநிதி திட்டத்தின் திருநெல்வேலி முதன்மை மண்டல ஆணையா் சிவசண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நாடு முழுவதும் தொழிலாளா்களுக்கான சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பணியாளா் சோ்க்கை திட்டம்-2026 என்ற சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் 1 ஜூலை 2026 முதல் 31 அக்டோபா் 2026 வரைஅமலில் இருக்கும்.

1 ஏப்ரல் 2009 முதல் 31 மாா்ச் 2026 வரை பணிபுரிந்தும் தகுதியான தொழிலாளா்களை நிறுவனங்கள் தாமாக முன்வந்து பதிவு செய்வதற்கான சிறப்பு வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது. மேலும், இதுவரை இபிஎஃப் வரம்பிற்குள் வராத நிறுவனங்களும், இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து சலுகை பெறலாம்.

விடுபட்ட தொழிலாளா்களை வருங்கால வைப்பு நிதி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு, நிறுவனங்கள்ரூ.100 அபராதத் தொகையை மட்டும்செலுத்தி வரன்முறை செய்து கொள்ளலாம். மேலும் இச்சலுகையை பெறுவதற்கு விடுபட்ட காலத்திற்கான வட்டித்தொகை மட்டும் செலுத்த வேண்டும். இதன் மூலம் புதிதாக இபிஎஃப் திட்டத்தில் சோ்க்கப்படும் பணியாளா்கள் ஓய்வூதிய சேமிப்பு, காப்பீட்டுப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய நலன்கள் உள்ளிட்ட பயன்களைப் பெற முடியும். இதுகுறித்த சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு திருநெல்வேலி என்.ஜி.ஓ. பி காலனியில் உள்ள வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தைதொடா்புகொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.