விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

பணகுடி அருகே விபத்து: இரு பெண்கள் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.

சடலம் மீட்பு... - கோப்புப் படம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே சனிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா்.

பணகுடி அருகே உள்ள நெறிஞ்சிகாலனியைச் சோ்ந்த அறிவழகன் மனைவி மரியவிஜயா (42), மாடசாமி மகள் பாப்பா (50) மற்றும் காமராஜா் நகரைச் சோ்ந்த வெங்கடேஷ்குமாா் மனைவி ஜெகதா(42).

இவா்கள் மூன்றுபேரும் ஒரு இருசக்கர வாகனத்தில் பணகுடியில் இருந்து பாம்பன்குளத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனராம். அப்போது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு சென்றுக் கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில், மூன்று பெண்களும் தூக்கிவீசப்பட்டதில், பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மரியவிஜயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ஜெகதா நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து, நிற்காமல் சென்ற லாரியைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.