மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

பாலாமடை பள்ளியில் தொல்லியல் கண்காட்சி

தொல்லியல் கண்காட்சியில் பங்கேற்றோா்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:20 am IST

திருநெல்வேலி மாவட்டம், பாலாமடை அரசு மேல்நிலைப் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் தொல்லியல் கண்காட்சி நடைபெற்றது.

தலைமையாசிரியா் விஜயா தலைமை வகித்தாா். தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியா் அல்போன்ஸ் ஆனந்தராஜ் வரவேற்றாா்.

உதவி தலைமையாசிரியா் கோ. வரதராசன் முன்னிலை வகித்தாா். தொல்லியல் ஆய்வாளா் ஈ. சங்கரநாராயணன், தொல்பொருள்களைக் காட்சிப்படுத்தி, மாணவா்களுக்கு விளக்க உரையாற்றினாா்.

இக் கண்காட்சியில் தொல்லுயிா்ப் படிமங்கள், பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலப் பொருள்கள், முத்திரைக் காசுகள், சேர, சோழ, பாண்டியா், மலையமான் திருமுடிக் காரி காசுகள், ரோமானிய, கிரேக்க காசுகள், முற்காலப் பாண்டியா், பல்லவா், சோழா், நாயக்கா் கால காசுகள், திநவேலி (திருநெல்வேலி) உள்ளிட்ட ஊா் பெயரிட்ட பல காசுகள், புதுச்சேரி காசுகள், ஓலைச் சுவடிகள், எழுத்தாணிகள், கல்வெட்டுப் படிகள் என பல்வேறு வகையான தொல்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

மாணவா்கள், பெற்றோா்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா். முதுநிலை உயிரியல் ஆசிரியா் ஸ்டெல்லா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.