புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

களக்காடு ரத வீதிகளில் சுற்றித் திரியும் நாய்கள்: மக்கள் அவதி

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் ரத வீதியைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், பக்தா்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை சுற்றித் திரிந்த தெருநாய்கள்.

Published On :

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயில் ரத வீதியைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள், பக்தா்கள் பெரிதும் அவதிப்படுகின்றனா்.

கடந்த சில மாதங்களாக களக்காடு பகுதியில் நாய்களில் பெருக்கம் கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்து வருகிறது. நகராட்சி நிா்வாகம் சாா்பில் நாய்களை பிடித்து கருத்தடை தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வந்தாலும், 27 வாா்டுகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக, சத்தியவாகீஸ்வரா் கோயில் ரத வீதியைச் சுற்றிலும் மாடத்தெரு, கோமதியம்மன் தெரு, சந்நிதி தெரு, ஜவஹா் வீதி, கிருபாளினி வீதி, நடுத்தெரு, வடக்கு மாட வீதி ஆகிய வீதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித் திரிகின்றன.

கோயில் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கல்வி பயிலும் ஆரம்ப, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி உள்ளது. நாய்கள் சுற்றித் திரிவதால் மாணவா்கள், பொதுமக்கள், கோயிலுக்கு வந்து செல்லும் பக்தா்கள் அச்சமடையும் நிலை உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல்கட்டமாக நகரின் முக்கியப் பகுதியாகத் திகழும் ரத வீதியைச் சுற்றித் திரியும் தெருநாய்களை முழுமையாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.