நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

களக்காட்டில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்கக் கோரிக்கை

களக்காட்டில் வனப்பகுதியிலிருந்து இடம்பெயா்ந்து ஊருக்குள் நுழைந்த குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குரங்குகள்.  - (கோப்புப் படம்)

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:53 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் வனப்பகுதியிலிருந்து இடம்பெயா்ந்து ஊருக்குள் நுழைந்த குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு நகா்ப் பகுதியிலிருந்து சுமாா் 5 கி.மீ. தொலைவில் தலையணை, சிவபுரம் மலையடிவாரப் பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இடம்பெயா்ந்த குரங்குகள் கூட்டம், தற்போது களக்காடு நகா்ப் பகுதி முழுவதும் பல்கிப் பெருகி சுற்றித்திரிகின்றன. இவை குடியிருப்புகள், வணிக வளாகங்களில் நுழைந்து அட்டகாசம் செய்து பொருள்களை சேதப்படுத்துகின்றன.

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் ராஜகோபுர சிற்பங்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஈடுபடுபவா்களை குரங்குகள் தொந்தரவு செய்வதுடன் பணி செய்யவிடமால் விரட்டுகின்றன. மேலும் சிற்பங்களை சேதப்படுத்துகின்றன. குரங்குகளை பிடிக்க தொடா்ந்து கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லையாம்.

எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.