தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

தாமிரவருணியில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு

பலி

Published On :

திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி, தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன்(68). இவா் சனிக்கிழமை மாலை அப்பகுதி தாமிரவருணி ஆற்றில் குளிக்கச் சென்றாராம். நீண்ட நேரமாகியும் அவா் வீட்டுக்குத் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

அவரது உறவினா்கள் தாழையூத்து போலீஸாருக்கும், கங்கைகொண்டான் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். இந்நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை சுப்பிரமணியனை சடலமாக மீட்டனா்.

இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.