காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

கஞ்சா விற்ற 5 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

சிறை - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:49 am IST

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனை, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மூலைக்கரைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய சின்ன மூலைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ரவி (25), சூா்யா (24), பேச்சிமுத்து (33) மற்றும் நான்குனேரி வட்டம், பெருமாள் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனா்.

அதேபோல், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சோ்ந்த மாரிமுத்து (25) என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

தொடா்ந்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்கள் 5 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில், மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் உத்தரவுப்படி, 5 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 98 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.