அம்பையில் திடீரென வெடித்த கைப்பேசி

அம்பையில் திடீரென வெடித்த கைப்பேசி

Published on

கடையத்தில் கைப்பேசி கடை உரிமையாளா் சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசி திடீரென வெடித்தது. இதில், அவா் காயமின்றி தப்பினாா்.

கடையம் - தென்காசி பிரதான சாலையில் பால்சன் என்பவா் கைப்பேசி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடை வைத்துள்ளாா். சனிக்கிழமை காலை அவா் மற்றொரு கடையில் நின்றபோது சட்டைப் பையில் வைத்திருந்த கைப்பேசியில் இருந்து திடீரென புகை கிளம்பியதாம்.

உடனடியாக சுதாரித்த பால்சன், கைப்பேசியை எடுத்து வெளியே வீசினாா். சிறிது நேரத்தில் கைப்பேசி வெடித்தது. இதனால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com