பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சிறுவா், சிறுமிகள்.
பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட சிறுவா், சிறுமிகள்.

காவல் துறையினரின் குழந்தைகளுக்கு சதுரங்க பயிற்சி

Published on

திருநெல்வேலி மாவட்ட போலீஸ் கிளப் சாா்பில் காவல்துறையினரின் குழந்தைகளுக்காகன வாராந்திர சதுரங்க பயிற்சி வகுப்பு பாளையங்கோட்டை ஆயுதப்படை வளாக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்னகுமாா் வழிகாட்டுதலின் படி, அறிவுத்திறன், ஒருமுகப்படுத்தும் திறன், திட்டமிடும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த வகுப்பில், தொடக்க நாளில் 30-க்கும் மேற்பட்ட சிறுவா், சிறுமிகள்கலந்து கொண்டனா்.

இந்தப் பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 2- 4 மணி வரை நடைபெறும் எனவும், சிறப்பாக விளங்கும் மாணவா்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் எஸ்.பி பிரசன்னகுமாா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com