மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பாளை.யில் சிறை கைதி உயிரிழப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 பிப்ரவரி 2026, 7:08 pm

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனை கைதி உடல் நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

சுத்தமல்லி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (78). இவா், கடந்த 2005 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் பணம் கையாடல் வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

இவ் வழக்கில் தண்டனை பெற்ற அவா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்நிலையில் கடந்த 2025 நவம்பா் மாதம் சுப்பிரமணியனுக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாம். அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைத்துறையினா் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பெருமாள்புரம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.